வடமாகாண முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த் திட்டம் திறந்து வைப்பு

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like