வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தென் மாகாணம்! நீரில் மூழ்கும் பல நகரங்கள்

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இலங்கையின் பிரதான நதிகளில் ஒன்றான களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

களனி ஆறு பெருக்ககெடுத்துள்ளதன் காரணமாக கொலன்னாவ தொடக்கம் சீதவாக்க வரையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பியகம, கடுவலை களனி தொம்பே, ஹங்வெல, பாதுக்கை, அவிசாவளை ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் பாய்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நில்வளா கங்கை உடைப்பெடுக்கும் அபாய நிலையை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கை போன்று, களுகங்கை, கிங்கங்கை, நில்வள கங்கை போன்ற ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like