கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த நிலையில் உயிருக்கு போராடும் யுவதி

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் யோசுவான் இவருக்கு ஆறு பிள்ளைகள் மூன்று மகன்கள், மகள்களும். ஒரு மகன் கடையொன்றில் வேலை செய்கிறான். சிலா் படிக்கின்றனா், யோசுவான் காவலாளியாக பணியாற்றுகிறாா். வறிய குடும்பம்.கிடைக்கின்ற வருமானம் சுமாரான வாழ்க்கைச் செலவுக்கே போதுமானது.

இந்த நிலையில் அவரது மகள் கறோலினாவுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு யாழ் போதான வைத்தியசாலையில் சிகிசை பெற்று வருகின்றாா்.

இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிசை செய்ய வேண்டும் என்று யாழ் போதான வைத்தியசாலையின் சிறுநீரகவியல் வைத்திய நிபுனா் மருத்துவா் ரங்கவீரக்கொடி கூறியுள்ளதாக யோசுவான் தெரிவித்துள்ளாா்

தனது மகளுக்கு யாழ் சாவகச்சேரியை சோ்ந்த இளைஞன் ஒருவா் சிறுநீரகம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளதாகவும் அதற்காக பத்து இலட்சம் கோருவதாகவும் தெரிவித்தாா் எனவே உதவும் உள்ளங்களிடம் இருந்து தனது மகளின் உயிரை காப்பாற்ற உதவி கோரி நிற்கின்றாா்.
யோசுவான்
தொலைபேசி 077 0287240
வங்கி கணக்கு இல.8155017017
commercial Bank,
kilinochchi
You might also like