வவுனியாவில் வலைத்தளங்களில் சந்தைப்படுத்தலை அறிமுகம் செய்யும் நிகழ்வு

‘சமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல்’ எனும் வலைத்தளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு வவுனியாவில் ‘விக்ரா’ VICTA  நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (27-05) காலை 11.00 மணிக்கு வவுனியா இரண்டாம் குறுத்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி, மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கள விளக்கேற்றல் மற்றும் மதகுருமார்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வளவாளர்களாக விக்ரா VICTA நிறுவனத்தின் பயிற்சியாளர்களான ஆர்.தமிழ்அளகன், எஸ்.சிவராஜா மற்றும் எஸ்.கே.எஸ்.நாசிம் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

நிகழ்வில் வவுனியா வர்த்தகர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

You might also like