முல்லைத்தீவில் பலத்த காற்றினால் குடியிருப்புகளுக்கு சேதம்

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் முல்லைத்தீவில் கடும் காற்று காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்று வேகமானது நேற்று பிற்பகல் தொடக்கம் அதிகரித்த வேகத்துடன் வீசுதுடன், அந்த நிலை தற்போது வரையிலும் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக முள்ளியவளை புதுக்குடியிருப்பு பிததேசங்களில் வீதியோர மரங்கள் மற்றும் வீட்டுமுற்றத்தில் நின்ற மரங்கள் சில முறிந்து வீடுகளுக்கு மேல் விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்காலிக குடிசையில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டு கூரைகளம் பலமான காற்று காரணமாக சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like