ஓமந்தை, நாவற்குளத்தில் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும்

வவுனியா, ஓமந்தை, நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பி (உடையார்)யின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும் இன்று இடம்பெற்றது.

நாவற்குளம் வீரசக்தி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடையாராக இருந்த நல்லதம்பியின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட மண்டபத்தினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்திருந்தார்.

இதன்போது அக்கிராமத்தில் வாழ்ந்து வரும் முதியவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

You might also like