வவுனியாவில் பணம் பெற்று வேலை பெற்றுக்கொடுக்கும் மோசடி வேலைத்திட்டம் அம்பலமானது

வவுனியாவில் இன்று 27.05.2017 காலை 10.00 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் அரச தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து நேர்முகப்பரீட்சை இடம்பெற்றுள்ளதுடன்  இரண்டு இலட்சம் பெற்றுக்கொண்டு வேலை பெற்றுத்தருவதற்கு ஒரு குழுவினர் செயற்பட்டு வந்துள்ளனர்.

இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலுள்ள ஒரு குழுவினர் அரச சேவையில் சுகாதாரத் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இதன் ஒரு கட்டம் இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று பணம் பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த காலத்திலும் சுகாதாரத் தொண்டர்களாக 92பேருக்கு வேலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கினைப்பயன்படுத்தி ஒரு குழுவினர் அரச சேவையில் தொழில் பெற்றுத்தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளனர்.

அதே பாணியில் இன்றும் பலரிடம் பணம் பெற்றுச் சென்றுள்ளனர். ஒருபுறம் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் மேற்கொண்டு தமக்கு நிரந்தர நியமணம் பெற்றுத்தருமாறு கோரி போராடி வரும் வேளையில் அவர்களை விடுத்து புதியவர்களை உள்ள வாங்கி அவர்களிடம் இரண்டு இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளும் மோசடியான தொழிலினை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் 40ற்கும் அதிகமானவர்கள் அரச திணைக்களத்தில் வேலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்றுள்ளனர்.

இணையத்தளத்தில் பிரதி செய்யப்பட்ட செய்தி இந்த செய்திக்கு நியுஸ்வன்னி ஊடகம் எவ்விதத்திலிலும் பொறுப்பல்ல

You might also like