சற்று முன் முரசுமோட்டையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி முதியவர் பலி

கிளிநொச்சி முரசுமோட்டை அந்தோனியார் கோவில் முன்றலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பலியானவர் விஸ்வமடு புன்னைநிராவிப் பகுதியைச் சேர்ந்த 63 வயதான முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடங்கள் வாகனம் நிறுத்த வேண்டிய பகுதிக்கு வெளியே என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறிய ரக உழவு இயந்திரத்தை குறித்த சாரதி எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like