இயக்கச்சி பொதுச்சந்தை வடக்கு மாகாணசபையால் திறந்து வைப்பு

கிளிநொச்சி-பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைக்குட்பட்ட இயக்கச்சிச் பொதுச் சந்தைக் கட்டடம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தலைமை அலுவலகம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோரால் இன்று (27) காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்குமாகாண சபையின் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ், உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபாய் 14.7 மில்லியன் செலவில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தலைமை அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் மாகாண துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

You might also like