அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்!

அமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை மாற்றம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் அந்தந்த அமைச்சு தொடர்பாக சிறந்த தேர்ச்சியை கொண்டிருக்க வேண்டுமென்ற மஹிந்த அணியினரின் வாதத்தை ஏற்க முடியாதெனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ராஜபக்ஷ குடும்பத்தினர் தம்வசம் வைத்திருந்ததை மறந்துவிடக் கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

You might also like