வீதியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட சிசு

வீதியில் கைவிப்பட்ட நிலையில், பிறந்து ஒரே நாளேயான சிசுவொன்று நேற்று மாலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சர்வோதய வீதியில் சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், சிசுவை பாதுகாப்பாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சிசு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like