சீரற்ற காலநிலையினால் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாகவும்,112 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் 230 குடியிருப்புகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 701 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.24 ஆயிரத்து 603 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 304 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, மாத்தளை, கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

 

You might also like