வவுனியா தாண்டிக்குளத்தில் இளைஞன் மீது 15பேரடங்கிய குழுவினர் தாக்குதல்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று 28.05.2017 பிற்பகல் வீட்டிற்குள் புகுந்த 15பேரடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை தாண்டிக்குளம் முதலாம் ஒழுங்கையில் குழாய்க்கிணறு தோண்டும் இயந்திரம் வீதியில் நின்றுள்ளது. அவ்வழியில் மோட்டார் சைக்கிலில் தாயாருடன் சென்ற இளைஞரான 21வயதுடைய சிவதீஸ்வரன் கஜராஜ் என்பவரை 15ற்கும் மேற்பட்ட குழாய்க்கிணறு தோண்டும் தொழிலாளர்கள் மதுபோதையில் ஒன்றினைந்து தாக்கியுள்ளனர் பின்னர் அப்பகுதியிலுள்ள இளைஞரின் வீட்டிற்குள் இளைஞனை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதைத்தடுக்கச் சென்ற தாயார் மீதும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர். இளைஞனைத்தாக்கிவிட்டு இளைஞனின் மோட்டார் சைக்கிலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலையின் அனுமதித்துவிட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் 12.35மணியளவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இரவு 7மணிவரையும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிசார் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like