பாடசாலைகளை மூடும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!

அனர்த்த நிலைமைகளை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமைகள் நீங்கும் வரையில் பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்று நிருபத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கும் போது மாகாண பாடசாலைகள் என்றால் மாகாண அல்லது வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க முடியும்.

தேசிய பாடசாலை என்றால் தேசியப் பாடசாலைகள் பணிப்பாளருக்கு அறிவித்து பாடசாலைகளை மூட முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாண பாடசாலைகள் இன்றும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like