இலங்கையில் எட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எட்டு 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 12 மாவட்டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வசித்து வந்த மக்களின் இயல்வு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

தென்மாகாணம் முழுவதும் வெள்ள நீர் காடாக மாறியிருக்கிறது. இலங்கையின் முப்படையினரும், இந்திய கடற்படையினரும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயிருக்கின்றனர். மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்த பல மணிநேரங்களில் முக்கியமாக எட்டு மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு ஆபத்து இருப்பதாகவும், மக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like