வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நூதனமுறையில் திருட்டு

வவுனியா, பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆலயத்தின் மூன்று உண்டியல்களை எடுத்து வெளியே சென்று அதிலிருந்த பெருமளவான பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த ஆலயத்தில் இதற்கு முன்பும் பல தடவைகள் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like