கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் மாவட்ட அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like