சீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த இந்திய தூதுவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, இந்த மாதம் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.

இந்த நிலையில் தென் மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like