வவுனியா வர்த்தகர்களிடம் ஓர் வேண்டுகோள்! தெற்கிலுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

தெற்கு இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் அழிவுக்குட்பட்ட இலங்கை மக்களுக்கான அத்தியாசியமான உணவுப் பொருட்கள் நாளை  முதல் வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரிக்கப்படவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

தென்னிலைங்கையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் தமது வாழ்விடங்களை இழந்து அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கான உணவுப் பொருட்களை வவுனியா வர்த்தகர்களிடமிருந்து பெற்று புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலாரிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எனவே அனைத்து வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கி தென்னிலங்கை மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஒன்றினையுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like