கிளிநொச்சி பாடசாலைகளுக்கு சிங்கள ஆசிரியர்களை நியமித்துத்தருமாறு முதல்வரிடம் கோரிக்கை

கிளிநொச்சி, வலைப்பாடு பிரதேச பாடசாலைக்கு சிங்கள ஆசிரியர்களை நியமித்துத் தருமாறு அங்குள்ள பொதுமக்கள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, வலைப்பாடு பிரதேசத்தில் குடிநீர்த்திட்டமொன்றை பொதுமக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்த நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் பொதுமக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தற்போதைக்கு வலைப்பாடு பிரதேச பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களே சிங்களப் பாடத்தை கற்பித்துக் கொண்டிருப்பதாகவும், எனினும் அது சிறந்த பெறுபேற்றைத் தரவில்லை என்றும் பொதுமக்கள் முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே, ஒவ்வொரு பாடசாலைக்கும் குறைந்தது இரண்டு வீதம் சிங்களப் பாட ஆசிரியர்களை நியமித்துத்தருமாறும் பொதுமக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி இது தொடர்பில் சாதகமான முடிவொன்றைப் பெற்றுத்தருவதாக முதமலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

You might also like