100 ஆவது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போராட்டத்திற்கு தடை விதித்த பொலிஸார்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் ஒரு கட்டமாக, கிளிநொச்சியில் சர்வமத பிரார்த்தனை மேற்கொள்ளப்படவுள்ளது.

காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள சர்வமத பிரார்த்தனையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற உத்தரவு பிரதியைக் காட்டி மக்கள் வீதியில் ஒன்றுகூடுவதற்கு தடை விதித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை புகைப்படம் எடுத்துச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like