கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சியில் ஏ9 வீதியின் போக்குவரத்து நடவடிக்கையை முடக்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்றுடன் 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதனையொட்டி கந்தசுவாமி ஆலய முன்றலில் சர்வமத பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவையும் மீறி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வீதியை இடைமறித்து போக்குவரத்து நடவடிக்கைகைளை முடக்கி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

You might also like