வவுனியாவில் அன்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் : சாரதி கைது

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (29.05.2017) மாலை இடம்பெற்ற அன்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அன்புலன்ஸ்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிருந்து மூன்று முறிப்பு பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபகுதிக்கு மாற முற்பட்ட சமயத்தில் ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த அன்புலன்ஸ் வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அன்புலன்ஸ்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like