வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு நிவாரணம் சேர்க்கும் பணியில் வவுனியா பொலிஸார்

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் முகமாக இன்று (30-05) வவுனியாவில் பொலிசார் நிவாரணம் சேர்க்கும் பணியை மேற்கொண்டனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியவசிய பொருட்களை தந்துதவுமாறு கோரி வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் வவுனியா பொலிசார் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

அத்தடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர் எதிர்வரும் யூன் 01 திகதிவரை வவுனியா பொலிஸ் நிலையத்திலோ அல்லது வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலோ பொருட்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like