வவுனியா – முல்லைக்குளம் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகள் கடத்த முயன்ற இருவர் கைது!

வவுனியா – முல்லைக்குளம் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுறா இறக்கைககள் மற்றும் கடலட்டைகள் கடத்த முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்களிடமிருந்து 694 கிலோ கிராம் சுறா இறக்கைகள் மற்றும் 367 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடமிருந்து படகு மற்றும் ஜி.பி.எஸ் கருவியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like