வவுனியா செட்டிகுளம் பிரதேசப்பிரிவுக்கு உட்பட்ட கணேஷா விளையாட்டு மைதான புனரமைப்பு

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவில் கணேசப்புரம் விளையாட்டு மைதான புனரமைப்பு நிறைவு பெற்று இளைஞர்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று இளைஞர் கழக தலைவர் செல்வன் செ. அனோஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரி இ.சசிகரன் ,முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன் சசிகுமார் , மாவட்ட சம்மேளனத் தலைவர் கா.கிரிதரன் மற்றும் செட்டிக்குளம் பிரதேச அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You might also like