இலங்கையின் பருவமழை தொடர்பில் ஆய்வு செய்யும் நாசா!

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாசாவின் உதவி கோரப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி முதல் இலங்கையை தாக்கிய பருவ மழையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட மண்சரிவு போன்ற பாரிய அனர்த்தங்கள் தொடர்பில் நாசாவின் உலகளாவிய மழை அளவீட்டு திட்டம் அல்லது செயற்கைக்கோள் தரவுகளை இலங்கை சேகரித்துள்ளது.

காற்றுக்கான வானிலை ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், மே மாதம் 30ஆம் திகதி வரை பருவ மழை தொடர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் கடும் மழை பெய்துள்ளதாக நாசாவின் ஒருங்கிணைந்த செயற்கை கோள்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. GPM என்ற தரவின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

GPM என்பது நாசா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA ஆகியவற்றிற்கும் ஒரு கூட்டுப் பணியாகும்.

You might also like