வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 4பேர் சமூகத்துடன் இணைவு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31.05.2017) காலை 10.30மணியளவில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) – கிளிநொச்சி, விக்னராசா துஷ்யந்தன் (வயது 35) – யாழ்ப்பாணம், முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 37) – ஒட்டுசுட்டான், அஜித் ரோகண (வயது 48) – பேலியகொட ஆகிய நான்குபேர் தமது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

You might also like