வவுனியா விபுலானந்தாக்கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு

யூன் 05 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தாக்கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் வாரம்( 29.05)  திங்கள் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தினமும் ஆசியர்கள் மாணவர்கள் சூழல் தொடர்பான  பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி வருகின்றனர் . இன்று புதன்கிழமை (31.05) விசேடமாக சூழல் அபிவிருத்தி அதிகாரசபையில் இருந்து வருகை தந்த சுற்றாடல் உத்தியேதாகத்தர்  திருமதி ந. சொரூபி சூழல் முகாமைத்துவமும் அபிவிருத்தியும் பற்றி உரை நிகழ்த்தினார் . பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சூழல் வாசகங்கள்  தொடர்பான பதாதைகளுடன் பாடசாலை வளவில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

நாம் சுற்றாடலைக் காப்போம் சுற்றாடல் எம்மைக் காக்கும் ‘ எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை ஆசிரியர்களான திரு .வில்வராஸா, திரு ஈஸ்வரன், திருமதி வாசுகி ரவிதாஸன்   ஆகியோரும் உரை நிகழ்த்தினர் .அதே வேளை சுற்றாடல் தொடர்பான கண்காட்சியும் இன்று இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில்  சுற்றாடலுக்குப் பொறுப்பான ஆசிரியர் திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார் .

இதே வேளை மாணவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பல்வேறு போட்டிகளும் நடாத்தப்பட்டு யூன்  05 நடைபெறவுள்ள நிகழ்வில்  பரிசில்கள் வழங்கப்படவுள்ளன

You might also like