வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் இன்றைய தினம் சந்தேகநபர்கள் பத்து பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்கான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் வித்தியா கொலை தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like