வவுனியாவில் சக மாணவிகள் முன் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் : மாணவன் தற்கொலை

வவுனியா கனகராயன்குளத்தில் இன்று (31.05.2017) மாலை ஆசிரியர் தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் தர்மராசா ஜனர்த்தன் ( வயது-17) என்ற மாணவன் வழமை போன்று இன்று (31.05.2017) காலை 7.30மணிக்கு கனகராயன்குளத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை நேரத்தில் ஆசிரியர் சக மாணவிகள் முன்பாக குறித்த மாணவன் மீது தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் இன்று மாலை வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த மருந்தினை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்போது குறித்த மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You might also like