வவுனியாவில் வடக்கு பிரதேச சபையின் நிர்வாக கட்டடம் மற்றும் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாக கட்டடம் மற்றும் கலாச்சார மண்டப திறப்பு நிகழ்வு இன்று காலை நெடுங்கேணியில் இடம்பெற்றது.

நீண்ட காலமாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் நிர்வாகம் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்திருந்தது.

இந்த நிலையில் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு, அமைக்கப்பட்ட இந்த கட்டடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைத்திருந்தார்.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேசத்தின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட கலாச்சார மண்டபத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்தார்.

பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, செ.மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like