வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்கள், ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தினரால் பாடசாலைகளில், திணைக்களங்களில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் எம்.எம்.எம். அனஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்காக அமைக்கப்பட்ட விஷேட மையத்தில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களால் உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

You might also like