வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் சிபாரிசின் பேரில் கனடா புன்னகை அமைப்பினால் (Smile foundation) துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க. சர்மிலன் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. வசந்தரூபன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like