மதுவால் சீரழியும் இளைஞர்களையும் கிராமங்களையும் மீட்டெடுப்போம் : வவுனியாவில் துண்டுப்பிரசுரம்

வவுனியாவில் மக்களுடைய வாழ்வியலை சீரழிக்கும் மதுபானக்கடைகளை மூடுமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மக்களின் சமூக பொருளாதார கட்டமைப்பைச் சீரழிக்கும் மதுபானக்கடைகளை இழுத்து மூட அணிதிரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் நேற்று பிற்பகல் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடப்பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் “மதுவால் சீரழியும் இளைஞர்களையும் கிராமங்களையும் மீட்டெடுப்போம்“ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like