​வவுனியா மாவட்ட இளைஞர் , யுவதிகளுக்கு எச்சரிக்கை : விழித்துக் கொள்ளுங்கள்

ஊடக கற்கையிலும் போலியான வளவாளர்களுடன் வியாபார பதிவுடன் மட்டுமே நடாத்தப்படும் கற்கைகள் வவுனியாவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சில நிறுவனங்கள் ஊடகக்கற்கை நெறிகள் எனும் போர்வையின் தமிழ் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக தமது நிறுவனத்தில் ஊடகக்கற்கை நெறிகள் படித்தவர்கள் தற்போது இலங்கையின் முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாகவும் வவுனியாவில் உள்ள சில நபர்களின் பெயரையும் குறிப்பிட்டு இளைஞர்களை தமது ஊடக கற்கை நெறிகளுக்கு உள்வாங்குகின்றனர்.

இந்த நிறுவனங்கள் ஊடக கற்கை நெறிகளுக்காக எவ்வித அனுமதியினையும் அரசாங்கத்திடம் பெறாமல் வவுனியா பிரதேச செயலகத்தில் நிறுவனமாக பதிவினை மேற்கொண்டு நடத்திவருகின்றனர்.​

ஊடக கற்கை நெறியினை மேற்கொள்ளுவதாயின் ஊடக அமைச்சின் கீழ் பதிவினை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் போலியான ஊடககற்கை நெறி நிறுவனங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுங்கள்.

எமது செய்திப்பிரிவிற்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் (உத்தியோகபூர்வமற்றது) வவுனியாவில் இயங்கும் ஊடக கற்கை நெறி நிறுவனங்களுக்கு இதுவரையில் ஊடக அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை ( ஊடக அமைச்சின் அனுமதியின்றி இயங்கும் இவ்வாறான நிறுவனங்களின் சான்றிதழ்கள் இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் செல்லுபடியற்றது)

சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்திலும் இவ் ஊடக நிறுவனம் தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவ் பதிவுகள் பின்வருமாறு….

நன்றி :- eelavaanam இணையத்தளம்

You might also like