வவுனியா வர்த்தகர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

வவுனியா வர்த்தக சங்கத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு தினங்களாக வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி உதவிப் பொருட்களை நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர்.

வர்த்தகர் சங்கத் தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் மத்திய உறுப்பினர்கள் கலந்து கொண்டு வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, இன்று வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து விசேட குழுவினர் வவுனியா மாவட்ட செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like