வவுனியாவில் வறுமைப்பட்ட பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

மாவட்ட சமூகசேவை அலுவலகத்தினூடாக இலண்டனில் இயங்கிவரும் எ3 அமைப்பு (V3 Fundation ) மூலம் இன்று 02.06.2017 வெள்ளிக்கிழiமை வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் கல்லூரியில் கல்வி கற்கும் வசிகரன் சர்மிதா என்ற மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர் திரு பாலச்ச்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீனிவாசன் , சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.வசந்தரூபன், பிரதி அதிபர் ஆ.வரதராஜன் , உளவளத்துணை வழிகாட்டி ஆசிரியர் திருமதி வா.கனகசபாபதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செல்வி வசிகரன் சர்மிதாவின் தந்தை நோய் வாய்ப்பட்டு வேலைகள் செய்ய முடியாத நிலையில் உள்ள அதே வேளை தாயார் கமலாதேவி பாக்கு வெட்டி விற்று தனது மூன்று பிள்ளைகளைப் படிப்பித்து வருகிறார். வீடு பாதுகாப்பு அற்றதாக இருப்பதால் அயல் வீட்டில் சென்றே இரவில் உறங்குகிறார்கள். இந்நிலையில் படிப்பில் ஆர்வமுள்ள சர்மிதாவுக்கு கொக்குவிலைச சோந்த லண்டன் வாழ் உதவுமுள்ளம் திரு வில்வராஜா விமல்ராஜ் அவர்கள் சர்மிதாவின் தாயாரான திருமதி கமலாதேவி தொடர்பான வேண்டுகோளை எமது முகப்புத்தகம் ஊடாக கண்டு இவருக்கு தனது பங்கிற்கு துவிச்சக்கர வண்டியை வழங்க முன்வந்தார்.ஏ3 அமைப்பின் லண்டன் வாழ் அன்பர் திரு. பாலசிங்கம் தில்லைராஜன் இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

கூமாங்குளம் சித்திவிநாயகர் பாடசாலை மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலுள்ள பிள்ளைகளை அதிகம் கொண்டுள்ளது. எனினும் பாடசாலை சுற்றுப்புறச்சூழல் மிகவும் சூழலுடன் இயைந்த வகையில் சுத்தமாக பேணப்பட்டு வருவதுடன் உதவி தேவைப்படும் மாணவர்களின் பட்டியல் இங்கு சரியான முறையில் பேணப்பட்டு வருவதும், சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வருடாவருடம் இப்பாடசாலை மாணவர்கள் பல பரிசுகளை வென்று வருவதையும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் பாராட்டிப் பேசினார். இப்பாடசாலைக்கு பல்வேறு பௌதீக வளத்தேவைகள் இருப்பதால் உதவுமுள்ளங்கள் எதிர்காலத்தில் போதிய உதவிகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றாடலுக்கு பொறுப்பான ஆசிரியை திருமதி சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் சுற்றாடல் செயற்பாடுகள் பலர் பாராட்டும்படி அமைந்திருப்பதை அதிபர் சுட்டிக்காட்டி சுற்றாடல் செயற்பாடுகளுக்கும் உதவும்படி வேண்டுகோள் விடுத்தார்.

You might also like