கிளிநொச்சியில் இன்று 8 மணித்தியாலங்களுக்கு மின் தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி, ஐயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், 651 ஆவது பிரிவு இராணுவ முகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் மொகமட் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகள் இந்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

 

You might also like