வவுனியாவில் மாணவனின் மரணத்தால் கொந்தலிக்கும் மாணவர்கள் : பொலிஸார் குவிப்பு நடப்பது என்ன?

வவுனியா கனகராயன்குளத்தில் விசமருந்தி தற்கொலை செய்த மாணவன் தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் இன்று (02-06-2017) நடைபெற்று வருகிறது.

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் உயர்தர மாணவன் தர்மராசா ஜனர்த்தன் ( வயது -17) வழமை போன்று கடந்த (31.05.2017) காலை 7.30மணிக்கு கனகராயன்குளத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை நேரத்தில் ஆசிரியர் சக மாணவிகள் முன்பாக குறித்த மாணவன் மீது தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் கடந்த 31.05.2017 மாலை வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த கிருமிநாசினி மருந்தினை அருந்தியுள்ளார். இதனை அவதானித்த பெற்றோர்கள் மாணவனை புளியங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு முச்சகரவண்டியில் அழைத்துச்சென்றுள்ளனர். எனினும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அன்புலன்ஸ் வண்டியில் அழைத்து சென்ற சமயத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியரை கைது செய்ய பொலிஸார் நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு முன்பாக கறுப்புகொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு இரங்கல் தெரிவித்து பதாதைகள் கட்டப்பட்டுள்ளது.

இன்று (02.06.2017) மதியம் 2.30மணிக்கு சடலம் குறிசுட்டான் பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like