அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள்

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகமும், பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்று (01) கையளித்துள்ளனர்.

அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் நிவாரண பொருட்களை காலி மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர்.

இதன்போது, உலர் உணவு, மருத்துவ பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன.

குறித்த பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அரச அதிபர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு, இது ஒரு நல்லெண்ண செயற்பாடாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

You might also like