முல்லை. மாணவிகளை கேலி பண்ணும் நபர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை!

முல்லைத்தீவு, முள்ளியவளையில் பாடசாலை மாணவிகளை சங்கடப்படுத்திய நபர்களை பொலிசார் இன்று எச்சரித்துள்ளனர்.

பாடசாலை முடிவடைந்து வீடு செல்லும் மாணவிகளை தினமும் சில இளைஞர்கள் கேலி செய்து அவர்களை உளவியல்ரீதியாக பாதிப்படையச் செய்வதாக முள்ளியவளை வர்த்தகர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய சங்கடப்படுத்தும் சில நபர்களை முள்ளியவளை பொலிஸார் இன்று எச்சரித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு அநாகரிகமான செயற்பாட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முள்ளியவளை பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like