கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான வைத்திய அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சிற்கு வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அனுமதியினை இலங்கை மருத்துவ சபை கடந்த வாரம் வழங்கியுள்ளதாக குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.

வடமாகாணத்தில் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சின் தகவல்கள் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் உள்ளகப் பயிற்சிக்காக மருத்துவர்கள் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையினை வழங்குவதற்கான மருத்துவ மற்றும் ஆளணி வசதிகள் காணப்படுவதாக இலங்கை மருத்துவசபை திருப்தியடைந்தால் மட்டுமே உள்ளக மருத்துவப் பயிலுனர்களுக்கான நியமன அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like