பிரபல மோட்டார் சைக்கிள் வீரர் மரணம் : விசாரணைக்காக விசேட குழு நியமனம்!

இலங்கையின் பிரபல மோட்டார் சைக்கிள் வீரர் ஆனந்த வெடிசிங்கவின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேரவினால்,இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட போது ஆனந்த வெடிசிங்க விபத்துக்குள்ளானார்.

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் போட்டியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களின் தவரின் காரணமாக ஏற்பட்டதென குடும்பத்தினர் மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலேயே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like