​வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்

​வவுனியாவில்  போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.06.2017) 100வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிவநேசன், தியாகராஜா ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்தனர்​.

 

You might also like