ஒரே வீதியில் இருவேறு நிறங்களில் பாதசாரி கடவைகள் : சிரமத்தில் மக்கள்

கல்முனைப்பிரதேச பிரதான வீதியில் வீதியைக் கடப்பதற்கான பாதசாரி கடவை மஞ்சள் மற்றும் வெள்ளை போன்ற இரண்டு நிறங்களிலும் காணப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தற்போது மஞ்சள் நிறக் கடவைகளை வெள்ளை நிறமாக மாற்றி வருகின்றனர்.

இருப்பினும் ஒரே வீதியில் அடுத்தடுத்த பாதசாரிக்கடவைகள் இரு வர்ணங்களில் காணப்படுவதனால் மக்கள் வீதியை கடக்க சிரமத்தினை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like