தர்மபுரம் பகுதியை சேர்ந்த சிறைச்சாலை கைதி வவுனியாவில் மரணம்

வவுனியா சிறை சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் இன்று காலை உயிர் இழந்துள்ளார்.

இன்று காலை வவுனியா சிறை சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீன காரணமாக வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவரே   மரணம்  அடைந்தவராவார்.

இவர் கடந்த புதன் கிழமை அன்று வவுனியா  சிறைசாலையில் அடைக்கப்படடவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like