முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் 550 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு போதைத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த நபர் கைதாகியுள்ளார்.

குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like