வவுனியா பேருந்து நிலையத்தில் தமிழ் கொலை

வவுனியா பேருந்து நிலையத்தில் தமிழில் எழுதப்பட்ட பெயர் பலகை பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இதுவரை காலமாக இதனை யாரும் கண்டும் காணாதது போல் உள்ளார்கள்.

இலங்கையில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் தமிழில் பிழை இருந்தால் அதனை சுட்டிக்காட்டி அதனை திருத்தினாலும் கூட வடமாகாணத்திலே வவுனியாவில் பெரும்பான்மையாக தமிழரே அதிகம் வாழும் பிரதேசத்தில் இப்படியாக தமிழ் பிழை காணப்படுகின்றது.
இனிமேல் இப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் இதற்குரிய தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வவுனியா சாலை முகாமையாளரை தொடர்பு கொண்ட போது, “இந்த பெயர் பலகையானது இரண்டு வருடங்களாகி விட்டது. இப்பெயர் பலகையை நகர சபைதான் எமக்கு அமைத்துத் தந்தது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டவில்லை” எனத் தெரிவித்தார்.
You might also like