வவுனியால் மது போதையில் வந்தவர்கள் முதியவர் மீது தாக்குதல் : முதியவர் வைத்தியசாலையில்

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட  வயோதிபர் ஒருவர்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று (04.06) பிற்பகல் 03.30 மணியளவில்  வவுனியா மரக்காரம்பளை பகுதியில் உள்ள மதுபான சாலையில் மது போத்தல்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள குளப்பகுதியில் மது அருந்திய கும்பல் ஒன்று மது அருந்திய பின் அருகிலிருந்த காணியில் காணப்பட்ட பாலை மரத்தில் பாலைப்பழம் பறிப்பதற்காக அம்மரத்தை தறிக்க முற்பட்ட வேளையில் காணியின் உரிமையாளர் மரம் தறிப்பதை தடுக்க முயன்ற போது அக்கும்பலால் தாக்கப்பட்ட கிருபானந்த மூர்த்தி (58) தலையில் பலமாக அடிபட்டதன் காரணமாக  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது சகோதரரான சத்தியமூர்த்தி(56) என்பவரும் அருகே சென்ற போது கும்பலால் தாக்கப்பட்டு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மதுபானசாலையால்  அப்பிரதேசத்தில் பல சமூக சீர்கேடுகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.​

You might also like